Bizaka / DawnFish/ fish / seafood / fresh fish / quality fish / nagercoil fish / Kanyakumari fish / nutrient food / nutrient fish / medicinal fish / Webbazar / Zaka Coins / Zaka

ஏன் மீன் சாப்பிட வேண்டும் ?

 “For most individuals it’s fine to eat fish every day,” says Eric Rimm, professor of epidemiology and nutrition

மீன், உணவாகவும் ஊட்டச்சத்தாகவும் மற்றும் மருந்தாகவும், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எப்போதும் உண்ணக்கூடியதாகவும் உள்ளது.

மீன் உண்பதன் காரணங்கள்

மீனை ஒரு முழுமையான உணவு என்று கூறலாம்; ஏனென்றால் நமக்குத் தேவையான பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் உள்ள உலகின் ஒரே உணவு மீன் மட்டுமே. இந்த உணவினால் பக்க விளைவுகள் ஏதுமில்லை என்பது இதனாலுள்ள கூடுதல் நன்மையாகும்.

1. மீன் ஒரு உணவு

மனிதன்  உயிர் வாழ உணவு அவசியம்,எனவே மீனை ஒரு உணவாக அல்லது  மற்ற உணவு வகைகளுக்கு பக்க உணவாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இதனால் பூமியை சூழ்ந்துள்ள கடல் ஒரு உணவு பொக்கிஷமாக மனித குலத்திற்கு உதவுகிறது.

2. மீன் ஒரு  ஊட்டச்சத்து

மீனில் புரதம், கொழுப்பு, நீர், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்துள்ளதால் இதை நாம் உண்கிறோம். கார்போஹைட்ரேடினால் நமக்கு கிடைக்கும் ஆற்றல் மீனிலுள்ள புரதம், கொழுப்பு போன்றவற்றினால் கிடைப்பதால், மாற்றுணவு இல்லாவிட்டாலும் நாம் மீனை உண்டும் வாழ முடியும். எனவே வல்லுநர்கள் மீனை உலகத்தின் ஒரு அதிசய உணவாகப் பார்க்கின்றனர்.

3. மீன் ஒரு மருந்து

பொதுவாக வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள்உடலில் நோய் வராமலும் வந்த நோயைகுணமாக்கவும் பயன்படும் நுண்ணூட்ட சத்துக்கள் ஆகும். மீனில், இந்த நுண்ணூட்டச் சத்துக்கள் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் வந்த நோயை குணப்படுத்தும் சக்தியும் மீனினால் மனிதனின் உடலுக்கு கிடைக்கிறது. எனவே, தினமும் மீன் சாப்பிடுபவர்கள் குறைந்த அளவு காய்கறிகளை பயன்படுத்தினால் போதுமானது.

4. உடல் எடையை குறைக்கும் மீன்

நீங்கள் உங்கள் எடையை குறைக்க எண்ணினால், நீங்கள் அதிக மீன் சாப்பிட வேண்டும். நீங்கள்  இதை நம்பாமலும் இருக்கலாம், ஆனால் உண்மை இதுதான் ; உடல் எடையை குறைக்க நீங்கள் உண்ணவேண்டிய மீன் கொழுப்பு நிறைந்த மீன் என்று ஆராய்ச்சி கூறுகிறது. ஆனால் கொழுத்த மீன்களை அல்ல.

5. மீன் ஆற்றலை வழங்குகிறது

மனிதனின் உடல் உழைப்பிற்கும், மூளை உழைப்பிற்கும் எப்பொழுதுமே ஆற்றலும், சக்தியும் தேவைப்படுகிறது. இந்த ஆற்றல் மீனில் அதிக அளவு உள்ளது.உதாரணத்திற்காக, சில கலோரி அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சால்மன் மீன் :(154 கிராம்) 280 கலோரிகள், 12.5 கிராம் கொழுப்பு, 86 மி.கி சோடியம், 39.2 கிராம் புரதம், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து/சர்க்கரைகள் இல்லை.

சூரை : (154 கிராம்) 109 கலோரிகள், ஒரு கிராமுக்கு குறைவான கொழுப்பு, 0 கிராம் கார்போஹைட்ரேட், 24 கிராம் புரதம் உள்ளது.

6. மீன் ஒரு ஒமேகா-3 கொழுப்பு அமிலச் சுரங்கம்

இதய நோய்களுக்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அருமருந்தாக செயல்படுகிறது. சைவ உணவு உண்பவர்கள் கூட ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களுக்காக மீன் எண்ணெய் மாத்திரைகளை சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மீன்  சாப்பிடுபவர்களுக்கு இந்த ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக கிடைப்பதால் இதய சம்பந்தமான நோய்களிலிருந்து அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது. சில ஒமேகா-3  கொழுப்பு அமிலங்களில் அளவு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

நெத்திலி: (85 கிராம்) 111 கலோரிகள், 4 கிராம் கொழுப்பு, 1.7 கிராம் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்.

நெய்மீன் சூரை: (85 கிராம்) 109 கலோரிகள், 3 கிராம் கொழுப்பு, 0.7 கிராம் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

மீனில் சிறப்பம்சங்கள்

  1. நுண்ணூட்டச் சத்துக்களும், பேரூட்டச்சத்துக்களும் ஒன்றாக அமைந்துள்ள உணவு கடல் உணவு,
  2. கார்போஹைட்ரேட் இல்லாதஉணவு மீன் உணவு. இருப்பினும், மனிதனுக்கு தேவை ப்படுகிற ஆற்றல் மீனில் இருந்து கிடைக்கிறது.
  3. பால் உணவுகள், கொட்டை வகைகள், எண்ணெய் வகைகள், பழ வகைகள், காய்கறி வகைகள் போன்றவைகளில் இல்லாத அளவிற்கு அதிகமாக வைட்டமின்கள், தாது உப்புக்கள் போன்றவைகளில் நிறைந்த உணவு மீன் உணவு ஆகும்.
  4. காய்கறி மற்றும் பழ வகைகளில் காணப்படுவதை விட விதவிதமான மீன்கள்மனிதனுக்கு உணவாகக் கிடைக்கிறது. ஒவ்வொரு மீனின் சுவையும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுவது மனிதனுக்கு  மீன் திகட்டாத ஒரு உணவாக அமைந்துள்ளதற்கு ஒரு காரணம்.

சுருக்கமாக

மீனில் மனிதனுக்கு தேவைப்படுகிற எல்லா ஊட்டச்சத்துக்களும் இருக்கிற காரணத்தினால் தினசரி உணவில் மீனை சேர்த்துக் கொள்வது நல்லது. மனித குலத்தின் மூளை, இதயம், தோல், கண்கள், பற்கள், தலைமுடி போன்றவற்றை பராமரிக்கவும், அவை சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கவும், வந்த நோய்களை குணமாக்கவும் கடல் உணவினால் முடியும் என்பது நிச்சயம். நீரிழிவு நோய், வாத நோய், அல்மைசர் நோய், அழற்சி நோய் மற்றும் இதய நோய்க்கான தீர்வாக மீன் உணவு உள்ளது. , எனவே, மனிதன் தனது தினசரி உணவில் மீனைச் சேர்த்துக் கொள்வது ஒரு சரியானஉணவுத் தேர்வு.

Author : Deyennae

Founder- Bizaka, Co-founder- DawnFish, Webbazar & Zaka Coins

Postscript @ DawnFish

DawnFish-ல், நாங்கள் பலவகையான, ஆனால் உயர்தர மீன்கள் மற்றும் பிற கடல் உணவுகளை விற்பனை செய்கிறோம். உங்கள் தேவைக்கேற்ப எங்களிடம் எலும்பில்லாத க்யூப்ஸ், மீன் துண்டுகள், கறிக்கான துண்டுகள் மற்றும் முழு மீன்களையும் ஆர்டர் செய்யலாம். வழக்கமான கடல் மீன்களுடன், இறால், நண்டு, கணவாய் மற்றும் சிப்பிகளும் எங்களிடம் கிடைக்கும். நாங்கள் அன்றன்று பிடிபட்ட மீன்களை தரமானதாகவும், புத்தம் புதிதாகவும் விற்பனை செய்கிறோம்.

For Contact :

Mob: 9489514829 WhatsApp: 9489415067

App @ DawnFish Web : https://dawnfish.in

தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: