ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் என்பது நம் உடலிலன் முக்கியமான செயல்களைச் செய்யும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் ஆகும். நாம் உயிர்வாழத் தேவையான ஒமேகா3-களை நம் உடலால் உற்பத்தி செய்ய முடியாது. எனவே, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை நாம் உண்ணும் உணவுகளிலிருந்துதான் பெற வேண்டும்.
கொழுப்பு அமிலங்கள் என்றால் என்ன?
கொழுப்பு அமிலங்களின் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன, அவைகள் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் நிறைவுறா கொழுப்பு ஆகும். மேலும், நிறைவுறா கொழுப்புகளில் இரண்டு வகை உள்ளன, அவைகள், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் மோனோசாச்சுரேட்டட் ஆகும்.
நிறைவுற்ற கொழுப்புகள் “கெட்ட கொழுப்புகள்” என்று அழைக்கப்படுகின்றன, ஏனெனில் அவை இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற சில நோய்களின் அபாயத்தை அதிகப்படுத்துகின்றன. நிறைவுறா கொழுப்புகள் (பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள்) “நல்ல கொழுப்புகளா“கக் அறியப்ப்படுகின்றன, ஏனெனில் அவை நம் இதய ஆரோக்கியத்தற்கு பயன் அளிக்கின்றன.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் வகைகள்
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன; அவை,
- EPA (ஈகோசாபென்டேனோயிக் அமிலம்): EPA என்பது “கடல் ஒமேகா -3” என்றழைக்கப்படுகிறது, ஏனெனில் இது மீன்களிலிருந்து கிடைப்பதாகும்.
- DHA (டோகோசாஹெக்ஸெனோயிக் அமிலம்): DHA என்பதும் மீன்களில் காணபக்கிடைக்கும் கடல் ஒமேகா-3 ஆகும்.
- ALA (ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம்): ALA என்பது தாவர உணவுகளில் காணப்படும் ஒமேகா-3 வகையாகும்.
மனித உடலில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் தேவைகள்
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நம் உடலில் உள்ள அனைத்து செல்களும் திறம்பட செயல்பட உதவுகின்றன. அவை மனிதனின் உயிரணு சவ்வுகளின் இன்றியமையாத பகுதியுமாகும். அவை உடல் கட்டமைப்தெற்குபிற்கு உதவுவதுடன் செல்களுக்கு இடையேயான இணைப்புகளுக்கு உதவி புரிகின்றன. கூடுதலாக, ஒமேகா -3 கள் நம் உடலுக்கு ஆற்றலை (கலோரி) வழங்குகின்றன மற்றும் பல உடல் பாகங்கள் செயல்பட உதவுகின்றன. இதில் நம் இருதய பாகங்களும், நாளமில்லா சுரப்பிகளும் ஆகியவை அடங்கும்.
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் நன்மைகள்
ஒமேகா-3கள் கொடுக்கப்பட்ட அபாயங்களைக் குறைக்க உதவுகிறது:
- கார்டியோவாஸ்குலர் நோய் (CVD).
- CVD இருப்பதால் ஏற்படும் மரணம்.
- அசாதாரண இதய துடிப்பால் ஏற்படும் (அரித்மியா) திடீர் மரணம்.
- இரத்தக் கட்டிகள்.

ஒமேகா-3கள் பின்வருவனவற்றின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன:

- மார்பக புற்றுநோய் உட்பட சில வகையான புற்றுநோய்கள்.
- அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா.
- அதிக வயது ஆவதனால் ஏற்படும் மாஸ்குலர் சிதைவு (AMD).
மற்ற ஆரோக்கிய நன்மைகள்
- கார்டியோவாஸ்குலர் அமைப்பு: இதயம்,இரத்தம் மற்றும் இரத்த நாளங்கள் மற்றும் இரத்தம் ஆகியவை பயனடைகின்றன.
- நுரையீரல் அமைப்பு: நுரையீரல், காற்றுப்பாதைகள் மற்றும் இரத்த நாளங்கள் ,பயனடைகின்றன
- நோயெதிர்ப்பு அமைப்பு: எலும்பு மஜ்ஜை, மண்ணீரல், நிணநீர் மண்டலம் மற்றும் வெள்ளை இரத்த அணுக்கள் பயனடைகின்றன.
- நாளமில்லா அமைப்பு: கணையம், அட்ரீனல் சுரப்பிகள், தைராய்டு சுரப்பி, பிட்யூட்டரி சுரப்பி மற்றும் ஹார்மோன்கள்பயனடைகின்றன.

எந்தெந்த உணவுகள் ஒமேகா -3 களை வழங்குகின்றன?



- மீன் மற்றும் பிற கடல் உணவுகள். (சால்மன், கானாங்கெளுத்தி, சூரை மற்றும் மத்தி போன்றவை)
- கொட்டைகள் மற்றும் விதைகள் (ஆளிவிதை, சியா விதைகள் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்றவை).
- தாவர எண்ணெய்கள் (ஆளிவிதை எண்ணெய், சோயாபீன் எண்ணெய் மற்றும் கனோலா எண்ணெய் போன்றவை.
கடல் உணவுகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள்
கடல் உணவுகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் பொக்கிஷம் என்று சொன்னால் அது மிகையாகாது. பொதுவாக எல்லாம் மீன்களிலுமே ஒமேகா 3 உள்ளது. இருப்பினும், கீழ்கண்ட அட்டவணை சில மீன்கள்/கடல் உணவுகளில் ஒமேகா-3 கொழுப்பு அமில உள்ளடக்கத்தை பட்டியலிடுகிறது.
மீன் வகைகள் | அளவு (கிராம்) | ஒமேகா-3 (மில்லி கிராம்) |
நெத்திலி மீன் | 57 | 1,200 |
சிப்பி | 85 | 241 |
நண்டு | 85 | 351 |
சிங்கி இரால் | 85 | 71 |
மட்டி/ தோடு | 85 | 665 |
ஈரிதழ்ச்சிப்பி | 85 | 585 |
சாளை/ மத்தி | 57 | 556 |
கூனிறால் | 85 | 267 |
நெய்மீன் சூரை | 85 | 733 |
சூரை | 85 | 228 |
சால்மன் | 170 | 1,774 |
முடிவாக…
ஒமேகா -3 கள் நம் உணவில் இருந்து மட்டுமே பெற வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஆகும். நாம் உணவில் இருந்து ஒமேகா3 -இன் ALA ஐப் பெறும்போது, நம் உடல் சில ALA ஐ EPA ஆகவும் பின்னர் அதை DHA ஆகவும் மாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது. ஆனால் நாம் கடலுணவை உட்கொண்டால் நமக்கு DHA நேரடியாகவே கிடைக்கிறது. எனவே கடல் உணவு என்பதுஒமேகா-3 என்ற அற்புதமான ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருக்கிறதால் நமது உணவின் ஒரு பாகமாக இருப்பது நல்லது.
Author : Deyennae
Founder- Bizaka, Co-founder- DawnFish, Webbazar & Zaka Coins
Postscript @ DawnFish
At DawnFish, we sell a wide variety of fish and other seafood. You can order boneless cubes, slices, curry cuts and whole fish from us as per your requirements. Along with the usual sea fish, we also have prawns, crabs, squid and other oysters available. We sell daily caught fish of the highest quality.
For Contact :
Mob: 9489514829 WhatsApp: 9489415067
App @ DawnFish Web : https://dawnfish.in