Skip to content

Mon - Sat: 24/7

04652457700

webbazarind@gmail.com

Bizaka

Bizaka

  • Home
  • About Us
  • Projects
    • Webbazar
    • DawnFish
    • Zaka Coins
  • Blog
    • English
    • தமிழ்
  • Home
  • About Us
  • Projects
    • Webbazar
    • DawnFish
    • Zaka Coins
  • Blog
    • English
    • தமிழ்

Mon - Sat: 24/7

04652457700

webbazarind@gmail.com

கிரிப்டோகரன்சி பற்றிய சில தகவல்கள்

  1. Home   »  
  2. கிரிப்டோகரன்சி பற்றிய சில தகவல்கள்

கிரிப்டோகரன்சி பற்றிய சில தகவல்கள்

September 20, 2023October 19, 2023 Deyennaeதமிழ்

கிரிப்டோகரன்ஸி என்பது ஒரு டிஜிட்டல் டோக்கன் அல்லது ஒரு வகையான டிஜிட்டல் நாணயமாகும், இது மக்கள் ஆன்லைன் மூலம் ஒருவருக்கொருவர் நேரடியாக பணம் செலுத்த மற்றும் பெற்றுக் கொள்ள உதவுகிறது. கிரிப்டோகரன்சிகளுக்கு சட்டபூர்வமான அல்லது உள்ளார்ந்த மதிப்பு இல்லை; ஆனால், சந்தையில் மக்கள் அவற்றிற்கு எவ்வளவு பணம் செலுத்தத் தயாராக இருக்கிறார்களோ, அந்த மதிப்பை அது பெறுகிறது.

மற்ற கரன்சிகள் போலவே கிரிப்டோகரன்சிகளும் “மாற்றத்தக்கவையே”, அதாவது அவற்றின் மூலம் வர்த்தகம் செய்யலாம் அல்லது ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளலாம்.

தற்போது ஐந்து பெரிய கிரிப்டோகரன்சிகள் உள்ளன,  அவை, பிட்காயின், எத்தேரியம், டெதர் (யுஎஸ்டிடி), கார்டானோ  மற்றும் பைனன்ஸ் காயின் ஆகும். கூடவே சோலானா-வும் உள்ளது.

கிரிப்டோகரன்சியின் முக்கிய நோக்கங்கள்

  • Cryptocurrency என்பது ஒரு டிஜிட்டல் கட்டண முறையாகும், இது ஒரு பியர்-டு-பியர் அமைப்பாகும்,  இவை வங்கிகளைச் சார்ந்திருப்பதில்லை. யாருக்கு வேண்டுமென்றாலும், எங்கு வேண்டுமானாலும் இந்த முறையில் எளிதில் பணம் அனுப்பவும், பெறவும் முடியும்.
  •  கிரிப்டோகரன்சிகளால் மிகக்குறைந்த கட்டணங்களில் செயல்படுகிறது.  அதிக செலவற்ற பரிவர்த்தனைகளை இவற்றால் வழங்க முடிகிறது. 
  • Cryptocurrencies என்பது பணத்தின்  புதிய “பரவலாக்க முறை” வெளிப்பாடு ஆகும். அவை தற்போதுள்ள நாணய ஏகபோகத்தை எதிர்த்துப் போராடவும், அவைகளின் கட்டுப்பாட்டிலிருந்து பணத்தை விடுவிக்கவும் உதவுகின்றன.

கிரிப்டோகரன்சிதான் எதிர்காலம், ஏன்?

  • கிரிப்டோகரன்சிகள் உலகின் பாரம்பரிய நிதி அமைப்புகளின் ஏகப் போகத்திற்கு ஒரு தீர்வை வழங்குகிறது. எனவே ஒரு புதிய நாணய சாம்ராஜ்யம்  இதன் மூலம் உருவாகி தனி மனிதர்களுக்கு உதவி செய்கிறது, மேலும், அவை உலகளாவிய வர்த்தக அமைப்புக்கும் உதவுகின்றன.
  • அந்நியச் செலாவணி கட்டணம், அதிக பரிமாற்ற நேரம் மற்றும் அதிக பரிவர்த்தனை செலவுகள் ஆகியவை வணிகங்களுக்கும் தனிநபர்களுக்கும் நீண்ட காலமாக பிரச்சினைகளாக உள்ளன.  கிரிப்டோகரன்சிகள் இவைகளுக்கு தீர்வாக  அமைகின்றன.
  •  உலகளாவிய, திறந்த, புதிய டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தை செயல்படுத்துவதற்கு கிரிப்டோகரன்ஸிகள் கருவிகளாக செயல்படுகின்றன.

கிரிப்டோ எப்படி வேலை செய்கிறது?

கிரிப்டோகரன்சிகள் டிஜிட்டல் சொத்துகள். எனவே பாரம்பரிய பணம் போலல்லாமல், அவை அருவ வடிவில் உள்ளன. பொதுவாக கிரிப்டோகரன்சிகள் “பரவலாக்கப்பட்ட”வை. எந்தவொரு தனி நபரும் அல்லது நிறுவனமும் இதன் நெட்வொர்க்கைக் கட்டுப்படுத்த முடியாது என்பதே அதன் பொருள்.

எனவே தான், பிட்காயின் போன்ற பரவலாக்கப்பட்ட கிரிப்டோகரன்சியை வைத்திருப்பவர்கள் தங்கள் நிதிகளின் மீது முழுக் கட்டுப்பாட்டையும்  உரிமையையம் தாங்களே கொண்டுள்ளனர்.

மேலும், க்ரிப்டோகரன்சிகள் பிளாக்செயின் என்று அழைக்கப்படும் ஒரு புதிய தொழில்நுட்ப நெட்வொர்க்கில் செயல்படுகின்றன. வங்கி போன்ற, மூன்றாம் தரப்பினரின் உதவியில்லாமல் கிரிப்டோகரன்சி டோக்கன்களை அனுப்பவும் பெறவும் இது உதவுகிறது.

பிட்காயின், எத்தேரியம், சோலானா மற்றும் பிஎன்பி போன்ற சில கிரிப்டோகரன்சிகள் அவற்றின் சொந்த பிளாக்செயின்  தளத்தில் செயல்படுகின்றன. ஆனால் பொதுவாக, பெரும்பாலான கிரிப்டோகரன்சிகள் மற்றொரு பிளாக்செயினின் மூலமே செயல்படுகின்றன. அவற்றில் சில Ethereum, BNB மற்றும் Polygon ஆகும்.

கிரிப்டோ அதன் மதிப்பை எவ்வாறு பெறுகிறது?

கிரிப்டோகரன்சிகள் அதன் supply & demand, இயக்க வேகம், பயன்பாடுகள், புழக்கம், சார்ந்திருக்கும் நெட்வொர்க், சந்தை மேலாதிக்கம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், ஒழுங்குமுறை அமைப்பின் தாக்கம், மேக்ரோ பொருளாதாரப் போக்குகள் மற்றும் ஊகங்கள் போன்ற காரணிகளால் மதிப்பைப் பெறுகின்றன.

அதிக பிட்காயின் வைத்திருப்பவர் யார்?

  • சடோஷி நகமோட்டோ என்ற பெயரில் பிட்காயினை உருவாக்கியவர் மிகப்பெரிய பிட்காயின் வைத்திருப்பவர் என்று கருதப்படுகிறது.
  • இரண்டாவது இடம் டிஜிட்டல் சொத்து மேலாளர் கிரேஸ்கேலுக்கு செல்கிறது.
  • அதைத் தொடர்ந்து வருவது Binance மற்றும் Bitfinex.
  • சுவாரஸ்யமாக, ஐந்தாவது இடம் அமெரிக்காவின் அரசாங்கத்திற்கு சொந்தமாகியுள்ளது. 
  • Winklevoss இரட்டையர்கள், Michael Saylor, Robin Hood, MicroStrategy, Block One மற்றும் OKX ஆகியோரும் 2023 ஆம் ஆண்டின் பட்டியலில் முதலிட பட்டியலில் உள்ளனர். இவர்கள் திமிங்கலங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
பிட்காயின் பீஸ்ஸா தினம்

முதல் முறையாக பிட்காயின் பரிவர்த்தனை செய்யப்பட்ட தினத்தை குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மே 22, 2010 அன்று, பிட்காயின் மிகவும் சிலருக்குத் தெரிந்த காலகட்டத்தில் 10,000 பிட்காயின்களை கொடுத்து இரண்டு பீட்சாக்கள் வாங்கப்பட்டன.

Jeremy Sturdivant

பிட்காயினின் ஆரம்ப கட்டங்களில் புளோரிடாவில் வசித்த ப்ரோக்ராமர் லாஸ்லோ ஹன்யெக்ஸ், அவர் தனது பிட்காயின்களை பயன்படுத்த முடிவு செய்தார். பின்னர் அவர் BitcoinTalk மன்றத்தில் ஒரு செய்தியை வெளியிட்டார், “இரண்டு பெரிய பீஸ்ஸாக்களுக்கு நான் 10,000 பிட்காயின்களை செலுத்துகிறேன்” என்று.

சில நாட்களுக்குப் பிறகு, மே 22 அன்று, மன்றத்தில் உள்ள ஜெர்மி ஸ்டர்டிவன்ட் என்ற நபர் இந்த வர்த்தக வாய்ப்பை ஏற்றுக்கொணடு பாப்பா ஜான்’ஸிடமிருந்து இரண்டு பீஸ்ஸாக்களை ஹன்யெக்ஸிற்கு டெலிவரி செய்தார். இன்று ஒரு பிட்காயின் மதிப்பு $26,830.5 ஆகவும், 2021-ல் இதுவரை இல்லாத அளவுக்கு $69,044 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2023-ன் கிரிப்டோ- நட்பு நாடுகள்

கடந்த மூன்று ஆண்டுகளில் கிரிப்டோவை அதிகமாக ஏற்றுக் கொண்ட நாடுகள், கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • ஆஸ்திரேலியா
  • அமெரிக்கா.
  • பிரேசில்.
  • ஐக்கிய அரபு நாடுகள்
  • ஹாங்காங்.
  • தைவான்
  • இந்தியா
  • கனடா
  • துருக்கி
  • சிங்கப்பூர்

எத்தனை நிறுவனங்கள் கிரிப்டோவைப் பயன்படுத்துகின்றன?

எங்கள் விரிவான ஆராய்ச்சியின்படி: உலகளவில் சுமார் 15,174 வணிக நிறுவனங்கள் பிட்காயினை ஏற்றுக்கொண்டுள்ளன, அவற்றில் சுமார் 2,300 வணிகங்கள் அமெரிக்காவில் செயல்படுகின்றன. ஏப்ரல் 2022 நிலவரப்படி, அமெரிக்காவில் 36,659 பிட்காயின் ஏடிஎம்கள் உள்ளன. 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, 28% அமெரிக்க சிறு வணிகங்கள் கிரிப்டோகரன்சியை கட்டணமாக ஏற்றுக்கொள்கின்றன.

கிரிப்டோகரன்சியினால் வணிகங்களுக்கு கிடைக்கும் பல நன்மைகளில் சில.

  • காகித பணம் இனி தேவையில்லை.
  • புதிய பணப்புழக்கம் மற்றும் மூலதனத்தன அணுகல் உருவாகிறது.
  • விரிவாக்கப்பட்ட பரிவர்த்தனைமுறைகள்.
  • புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் மக்கள் குழுக்களை ஈர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள்.
  • இணைய 3.0-ன் முதல் நுழைவாக இது உள்ளது.
  • பரிவர்த்தனையின் வெளிப்படைத்தன்மை மற்றும் தணிக்கை முறை.
  • வாடிக்கையாளர் தனியுரிமையின் கூடுதல் அடுக்குகள்.
  • மூன்றாம் தரப்பு இடையூறுகள் முடிவுக்கு வருகின்றன.

இந்தியாவில் தங்கள் சொந்த கிரிப்டோக்களை பயன்படுத்தும் நிறுவனங்கள்

Tata-வின் டாடா நியூ, ( டாடா நியூ-விற்கும் டாடா காயினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை) Flipkart-ன் சூப்பர் நாணயங்கள், Rapido Bike Taxiயின் Rapido நாணயங்கள் மற்றும் FreshToHome-ன் Freshcash ஆகியவை இந்தியாவில் முன்னோடிகளாக விளங்குகின்றன.

ஆனால், இந்த நாணயங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி புள்ளிகளாக மட்டுமே வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் அடுத்த முறை அவர்களிடமிருந்து பொருட்களை வாங்கும்போது புள்ளி மதிப்புகளை மீட்டெடுக்கலாம். ஆனால், இந்த நாணயங்கள் இன்னும் பரிமாற்ற ஊடகமாக செயல்படவில்லை.

பிஸாக்கா-ன் ஜகா நாணயங்கள் பெருமையுடன் இந்தத் துறையில் நுழைந்துள்ளன. அதனுடன், தற்போது DawnFish இலிருந்து மீன் வாங்குபவர்களுக்கு ஜகா நாணயங்கள் வெகுமதியாக வழங்கப்படுகின்றன. ஆனால், ஜகா நாணயங்கள் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் செயல்படுகின்றன மற்றும் பரிமாற்ற ஊடகமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

ஜகா நாணயங்கள் என்றால் என்ன?

Zaka என்பது, Webbazar மற்றும் Dawnfish போன்ற Bizaka சமூகத்தின் தொடக்கத் திட்டங்களின் பரிவர்த்தனை நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட டோக்கன் ஆகும். டோக்கன் ஜூன் 2022 இல் Binance blockchain இயங்குதளத்தில் உருவாக்கப்பட்டது.

ஜகாவின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள்
  • இந்தியாவின் சில்லறை வர்த்தகத்துக்கான முதல் கிரிப்டோகரன்சியாக ஜகா தன்னை முன்னிறுத்துகிறது.
  • வெப்பஜார் செயலியுடன் ஜகா நாணயம் இணைக்கப்பட்டுள்ளது. எனவே வெப்பஜாரில் வர்த்தகம் நடக்கும்போது இந்த நாணயம் பயன்படத் தொடங்குகிறது.
  • டான் ஃபிஷ் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் மீன் வாங்கும் போது ஜகா நாணயம் அவர்களின் வாலட்டிகளில் ‘ஏர் ட்ராப்’ செய்யப்படுகிறது.
  • மேற்படி இரண்டு செயலிகளிலும் நடைபெறும் வியாபாரத்திற்கு அன்பளிப்புகளும், இலவசங்களும் வழங்கப்படுவதால் வர்த்தகம் அதிக அளவில் நடக்க வாய்ப்புள்ளது
  • ஜகாவின் தேவை அதன் புழக்கத்தை விட அதிகமாகும் போது ஜகாவின் மதிப்பு உயர்கிறது.
  • ஜகாவின் தேவை அதிகரிப்பதால் ஜகா வைத்திருப்பவர்களுக்கும் ஜகாவை சொத்தாக வாங்கியவர்களுக்கும் நன்மை பயக்கும்.

முடிவுரை

இன்டர்நெட்டின் மூன்றாவது அலையான வெப்-3 டெக்னாலஜி பல வியப்பான அறிமுகங்களை நமக்கு தந்துள்ளது. இனி வரும் காலங்களில் இந்த டெக்னாலஜி மாபெரும் வளர்ச்சியையும், கூடவே பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்களையும் நமக்கு தரவுள்ளது. இதற்கு இன்றியமையாதது கிரிப்டோ கரன்சியாகும். எனவே தற்போதுள்ள முன்னணி நிறுவனங்களும், தொழில்நுட்பங்களை முன்னெடுத்துச் செல்லும் இளைய சமுதாயமும் இதற்கு மாபெரும் ஆதரவு தெரிவித்து தங்களுடைய வணிகங்களில் இதை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இந்த வணிகங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகும் போது அதில் ஒன்றிணைக்கப்பட்டுள்ள அந்தக் குறிப்பிட்ட கிரிப்டோகரன்சியின் மதிப்பும் உயரும். எனவே வளர்ந்து வரும் நிறுவனங்களின் கிரிப்டோகரன்சியை ஒரு சொத்தாக வாங்கி வைக்கும் கலாச்சாரமும் தற்போது உருவாகி வளர்ந்து வருகிறது, இதுவும் பாராட்டத்தக்கதே.

Author : Deyennae

Founder : Bizaka

Co-founder : Webbazar, Zaka Coins, DawnFish

Post navigation

Previous: Some information about Cryptocurrency
Next: Daily Fish : Mackerel

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “Delivery App” : Current Trend of Retail Market
  • “டெலிவரி ஆப்” : சில்லறை சந்தையின் தற்போதைய போக்கு
  • தினசரி மீன்கள் : அயலை மீன்
  • Daily Fish : Mackerel
  • கிரிப்டோகரன்சி பற்றிய சில தகவல்கள்

Recent Comments

No comments to show.

Archives

  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • April 2023
  • November 2022
  • August 2022

Categories

  • English
  • தமிழ்
Proudly powered by WordPress | Theme: goldy-mex by inverstheme.