Bizaka / DawnFish/ fish / seafood / fresh fish / quality fish / nagercoil fish / Kanyakumari fish / nutrient food / nutrient fish / medicinal fish / Webbazar / Zaka Coins / Zaka

அறிமுகம் : “டான்ஃபிஷ்” செயலி

புத்தம் புதிய மற்றும் உயர்தர மீன்களை வீட்டிலிருந்தபடியே, ஆன்லைனில்  வாங்கிட, எங்கள் “டான்ஃபிஷ்”  செயலியை பதிவிறக்கம் செய்ய உங்களை பணிவன்புடன் அழைக்கிறோம்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கடல் நீரிலிருந்து உயர்தர கடல் உணவு வகைகளை நேரடியாக உங்கள் சமையலறைக்குக் கொண்டு வருவதற்கு நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ளோம். உங்கள் வீடு அல்லது பணியிடத்திலிருந்து கொண்டே, உங்கள் மதிப்புமிக்க நேரத்தைச் செலவிடாமல், புத்தம் புதிய மற்றும் சத்துமிக்க கடல் உணவை இனி நீங்கள் சுவைக்கலாம்.

டான்ஃபிஷ்” செயலி மூலம், புத்தம் புதிய,மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த கடல் உணவு வகைகளை  உங்களுக்கு வழங்க நாங்கள் வந்துள்ளோம். கன்னியாகுமரி மாவட்ட மீன்பிடித் துறைமுகங்களின் உள்ளூர் மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகளுடன்  நாங்கள் வலுவான உறவை ஏற்படுத்துவதற்கு இவையே முக்கியக் காரணங்கள். வள்ளம் மீன்களையே (தினசரி மீன்பிடி முறையில் பிடிக்கப்படும் மீன்கள்) நாங்கள் அதிகமாக வாங்குகிறோம். பெரிய படகு மீன் மற்றும் இறக்குமதி மீன்களை கட்டாயம் தவிர்க்கிறோம். குறிப்பாக, பெரிய மற்றும் விலை உயர்ந்த  தூண்டில் மீன்களை கடியப்பட்டினம் துறைமுகத்திலிருந்து ஏலம் எடுக்கிறோம்; நாங்கள் சிறிய மீன்களை  பெரும்பாலும் (மத்திச் சாளை, நெத்திலி போன்றவை) “கரமடி”  ஏலத்தில் வாங்குகிறோம்.

கன்னியாகுமரி பெருங்கடல்களில் நிறைந்துள்ள பல்வேறு வகையான மீன் வகைகளின் சுவை பற்றியும், மீன்களின் சிறப்பியல்கள் பற்றியும், மீன்களில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள எங்கள் blog@bizaka.in ஐ அணுகவும். சதைப்பற்றுள்ள சூரை மீன்கள் முதல் மென்மையான சதைப்பற்றுள்ள நெய் மீன்கள் வரை, சுவையான இறால்கள் முதல் வாயில் நீர் வடிய வைக்கும் லாப்ஸ்ட்டர் வரை,  நாவின் ஒவ்வொரு சுவை மொட்டுகளுக்களையும் திருப்திபடுத்தும் கடல் உணவு வகைகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

உங்கள் கடல் உணவுத்தேவைக்கும், அந்த உணவு அளிக்கும் பூரண திருப்திக்கும்  நாங்கள் முன்னுரிமை அளித்து, “மீன் உங்கள் வீட்டு வாசலை அடையும் வரை ஒவ்வொரு அடியிலும் எங்கள் மீன்கள் மிகுந்த கவனத்துடன் கையாளப்படுகிறது” என்று நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறோம். இந்த வாக்குறுதியை காப்பாற்றுவதற்காக, ‘கொள்முதல்’, ‘போக்குவரத்து’, ‘பாதுகாத்தல்’, ‘சுத்தம் செய்தல் & துண்டித்தல்’, ‘அனுப்புதல் & டெலிவரி‘ மற்றும் வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை நாங்கள் கட்டமைத்துள்ளோம். நீங்கள் உயர் தர கடல் உணவை  மிக எளிமையாக வாங்கி ருசிக்க நாங்கள் மேலே கூறப்பட்ட பிரிவுகளை நிறுவியுள்ளோம் என்பதையும் இங்கு பதிவு செய்கிறோம். மீன் வியாபார வரலாற்றில் இது முதலும் முதன்மையுமானது.

கடலின் பரிசான,  ஊட்டச்சத்து மிகுந்த மீன்களை, சுத்தப்படுத்தி, தகுந்த அளவில் வெட்டி உங்கள் வீட்டு சமயலறைக்கு அனுப்பி வைப்பதில் எங்களுக்கு எப்போதுமே மகிழ்ச்சி. இத்தகைய எங்கள் சேவையை எங்கள் உயரடுக்கு வாடிக்கையாளரான நீங்கள்பெற இந்த “டான்ஃபிஷ்” பயன்பாட்டைப் பதிவிறக்க செய்ய உங்களை அன்புடன் வேண்டுகிறோம். எங்கள் செயலியை பதிவிறக்கம் செய்தமைக்கும் எங்கள் startup முயற்சிக்கு ஒத்துழைப்பு தருவதற்கும் நாங்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். எங்களின் மருத்துவ குணம் உள்ள, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கடல் உணவுகளை ருசித்து  நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ எங்கள் உளப்பூர்வ வாழ்த்துக்கள்.

நனறி…வணக்கம்!

தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: