மீன் உணவு அல்லது பக்க உணவாக மட்டுமல்ல, மனித உடலுக்கும் மூளைக்கும் உதவும் ஒரு ஊட்டச்சத்தும் ஆகும். மீன்களின் நிறைந்திருக்கும் புரதம் மற்றும் கொழுப்பு போன்ற மேக்ரோ-ஊட்டச்சத்துக்கள் மனிதனின் உடல் வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது; அதேபோன்று மீனின் நுண்ணூட்டச்சத்துக்களான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பல நோய்களைத் தடுக்கவும், வந்த நோய்களைக் குணப்படுத்தவும் உதவுகின்றன.
அதுபோல, நீங்கள் வாங்கிய மீனில் அத்தகைய புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளதா என்பதை பார்த்து வாங்குவது மிகவும் முக்கியம். பெரும்பாலும் நாம் மேற்கூறிய, மீனின் அடிப்படை பண்புகள் மற்றும் சுவையான தன்மைகளை புறக்கணித்து, தகுதியற்ற மற்றும் அழுகிய மீன்களையே வாங்குகிறோம். நிச்சயமாக, புத்தம் புதிய மீன் மட்டுமே மீன் பிரியர்களுக்கு அத்தகைய அசல் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்க முடியும் என்பதை இங்கு உறுதிப்படுத்த விரும்புகிறோம்.
சிறந்த மீன்களை வாங்குவது எப்படி ? நாம் மீன் வாங்கும் போது பின்பற்ற வேண்டிய காரியங்கள் என்னன்ன ?
உயர்தர மீன்களை உறுதி செய்ய, புதிய மீன்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று மீன் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், ‘புதிய மீன்களை எப்படி கண்டுபிடிப்பது?’ என்ற ஒரு கேள்வி எழுகிறது, அதற்கான தீர்வு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் மீன் வாங்கச் செல்லும்போது, முதலில் பின்வரும் கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்களைப் பெறுங்கள்.
1. எப்போது பிடிபட்ட மீன் இது ?
புத்தம் புதிய மீன்களே, உங்களின் ஒரே தேர்வாகும். எனவே, எப்போதுமே புதிதாக பிடிபட்ட மீனை வாங்குவதே நல்லது. மீன் பிடிக்கப்பட்ட பிறகு ஐந்து நாட்களுக்கு உண்ணக்கூடியதாக இருக்கலாம், ஆனால், அதில் புதிய மீனின் சுவையும் தன்மைகளும் இருக்காது.
குறிப்பு:
புதிய மீன்கள் தரமானவை. தரம் என்றால் ருசியான சுவை மற்றும் குறிப்பிட்ட மீனின் 100% சத்துக்களை வழங்கும் மீன் என்று பொருள்.
2. மீன்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன?
மீன்கள் சேமிக்கப்படும் விதமும், பாதுகாக்கப்பட்டு வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் விதமும் சுவை மற்றும் ஊட்டச்சத்து காரணிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
குறிப்பு:
மீன்களைப் பிடித்தவுடனேயே குளிர்விக்கப்பட வசதி செய்ய வேண்டும். அடுத்தபடியாக, வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் வரை அனைத்து நிலைகளிலும் குளிர்ந்த நிலையிலே அவைகள் பராமரிக்கப்பட வேண்டும்.
3. மீன்கள் எவ்வாறு தோற்றமளிக்கிறது மற்றும் எப்படி மணக்கிறது ?
மீனில் கெட்ட வாசனை இருந்தால், அது புதியதல்ல. புதிய மீன் கடல் நீரின் வாசனையைக் கொண்டிருக்கும்.
குறிப்பு :
நீங்கள் சுத்தம் செய்யப்பட்ட மீன் அல்லது வெட்டப்பட்ட மீனகளை வாங்கும்போது, வெட்டப்பட்ட துண்டுகளின் வெட்டு விளிம்புகள் பிசிறில்லாமல் நேர்த்தியாகவும், ஈரமான தன்மையுடனும் இருக்கிறதா என்று பார்த்து உறுதிப்படுத்க்கொள்ளவும். நீங்கள் முழு மீனை வாங்கும் போது, மீனின் கண்கள் தெளிவாகவும், உடல் உறுதியாகவும் உள்ளதா எனறு கவனியுங்கள்.
4. மீன்கள் எங்கிருந்து வந்தன ? (அல்லது) எந்த கடலில் பிடிக்கப்பட்ட மீன்கள் இவை?
தொழில்ரீதியான மீன் வியாபாரிகளிடமிருந்து, உள்ளூர் மீன்களை வாங்குவது எப்போதுமே நல்லது. நிச்சயமாக அதிக தூரத்தில் இருந்து வரும் மீன்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மீன்களை தவிர்க்கவும்.
குறிப்பு :
கன்னியாகுமரி மீன் பிரியர்களே…., கன்னியாகுமரியின் முக்கடல் நீரின் மீன்களை மட்டும் வாங்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். குமரி மீன்கள் மிகமிக சுவையுள்ள மீன்கள் என்பது உலகப் பிரசித்தம்.
வாடிக்கையாளர் தரப்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எவை ?
- இரண்டு நாட்களுக்குள் நீங்கள் வாங்கிய புத்தம் புதிய மீனைப் சமைக்கவும் அல்லது குளிர் சாதனப் பெட்டியில் பாதுகாக்கவும்.
- மீன்களை அறை வெப்பநிலையில் வைக்க வேண்டாம், ஏனெனில் மீன் மிகவும் மென்மையான உடலைக் கொண்டிருப்பதால் அறை வெப்பநிலையில் மிக வேகமாக கெட்டுவிட வாய்ப்பள்ளது.
- மீன் சாப்பிடுவது உங்களுக்கு நல்லது என்றாலும், எல்லா மீன்களும் உங்கள் உடலுக்கு நல்லதல்ல. மீனை வறுக்கும்போது அதன் நிறைவுறா கொழுப்பு நிறைவுற்ற கொழுப்பாக மாறிவிட வாய்ப்புள்ளது. பொதுவாக வறுத்த மீனைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக சுட்ட அல்லது அவித்த மீனைத் உண்பது நல்லது.
- பொதுவாக, கடல் உணவு என்பது ஒரு முழுமையான உணவாகும், இதில் நல்ல அளவு புரதம் மற்றும் நிறைவுறா கொழுப்பு உள்ளது. அதுபோலவே இதில் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இருப்பினும், சில மீன்களில் பாதரச அளவு அதிகமாக இருப்பதால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கலாம். எனவே, குறைந்த பாதரசம் உள்ள மீன்களை வாங்கவும்.
Author : Deyennae
Founder- Bizaka, Co-founder- DawnFish, Webbazar & Zaka Coins