நமது ஆரோக்கியமான மற்றும் சீரான உணவுத் தேவையில் மீனின்பங்கு அளப்பரியது. மீன் நமது உடலுக்கு இன்றியமையாத புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்களை அள்ளி வழங்குகிறது. தேவையான புரதச்சத்து இல்லாமல் நமது உடலை கட்டமைக்க முடியாது. வைட்டமின்கள் மற்றும் தாதுப்புக்கள் இல்லாமல் ஒரு ஆரோக்கிமான வாழ்க்கையை நாம் கற்பனையே செய்ய முடியாது. மேலும், இதில் உடலுக்குத்தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன.
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் என்ன செய்கின்றன?
- இதய நோய்களின் ஆபத்தை கடலுணவு மிகவும் குறைக்கிறது.
- உங்கள் தமனிகளில் உள்ள அடைப்பை நீக்க உதவுகிறது.
- ஒமேகா -3 இரத்த ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கிறது

குறிப்பு: இதய நோய் அபாயத்தைக் குறைக்க வாரத்திற்கு இரண்டு முறையாவது மீன் சாப்பிடுமாறு “அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்,” அமைப்பு பரிந்துரைக்கிறது.
குழந்தைகள் பராமரிப்பு

- கருப்பையில் வளரும் குழந்தைகளுக்கும் இந்த கடலுணவுகள் பயனளிக்கிறது.
- பாலூட்டும் பெண்கள் தாங்கள் மீன் சாப்பிடுவதன் மூலம் தத்தம் குழந்தைகளுக்கும் தேவையான சத்தை ஊட்டலாம்.
மீன்களின் பிற பயன்கள்
- இது மூளையை ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது.
- மனச்சோர்வு, அல்சைமர் நோய், டிமென்ஷியா, புற்று நோய் மற்றும் நீரிழிவு நோய்களின் வீரியத்தையும், அபாயத்தையும் மீன் சாப்பிடுவதன் மூலம் மிகவும் குறைக்கலாம்.
- மீனிலுள்ள புரதச்சத்து தசை திசுக்களை சரிசெய்யவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும், இரத்த தரத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது.
- கூடவே, மீனில் நிறைந்துள்ள வைட்டமின் மற்றும் தாதுக்கள் பற்கள், கண்கள், எலும்பு, தோல், முடி பராமரிப்பிற்கு இன்றியமையாதவைகள்.
Author : Deyennae
Founder- Bizaka, Co-founder- DawnFish , Webbazar & Zaka Coins
பின்குறிப்பு @ DawnFish
DawnFish இல், நாங்கள் பல்வேறு வகையான மீன்கள் மற்றும் பிற கடல் உணவுகளை விற்பனை செய்கிறோம். நீங்கள் எலும்பு இல்லாத க்யூப்ஸ், ஸ்லைஸ்கள், கறி வெட்டுக்கள் மற்றும் முழு மீன்களை உங்கள் தேவைகளுக்கேற்ப எங்களிடம் ஆர்டர் செய்யலாம். எங்களிடம் வழக்கமான கடல் மீன்களடன், இறால், நண்டு, கணவாய் மற்றும் பிற சிப்பி மீன்களும் கிடைக்கும். நாங்கள் அன்றாடம் பிடிக்கப்படும் மீன்களை உய்ர்ந்த தரத்துடன் விற்பனை செய்கிறோம்.