Bizaka / DawnFish/ fish / seafood / fresh fish / quality fish / nagercoil fish / Kanyakumari fish / nutrient food / nutrient fish / medicinal fish / Webbazar / Zaka Coins / Zaka

Zaka icon Billionaire

ஜகா நாணயங்களின் வணிக வெளிப்பாடுகள்

ஜகா நாணயம் பற்றிய ஓர் அறிமுகம்

ஜகா என்பது பிசாக்கா அறிமுகப்படுத்தியுள்ள ஒரு கிரிப்டோ டோக்கன் ஆகும். இது புதிய டெக்னாலஜி ஆகிய பிளாக்செயின் மூலம் செயல்படுகிறது. பிட்காயின் முதற்கொண்டு அநேக டிஜிட்டல்/ கிரிப்டோகரன்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த யுகத்தில் வியாபார பரிவர்த்தனைகளை எளிமையான முறையில் செயல்படுத்த பிசாக்கா அமைப்பு ஜகா காயினை பயன்படுத்துகிறது. தற்போது பிசாக்கா அமைப்பு தாம் செயல்படுத்த உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இந்த டோக்கனை  அறிமுகப்படுத்த உள்ளது.

ஜகா நாணயத்தின் பயன்கள்

ஜகா நாணயத்தினால் எண்ணற்ற பலன்கள் இருந்தாலும் ஒரு சில மட்டும் கீழே தரப்பட்டுள்ளன;

  1. பிசாக்காவின் வியாபார பரிவர்த்தனைகள் இதன் மூலம் எளிமையாகிறது.
  2. ஒவ்வொரு பரிவர்த்தனையும் யாராலும் மாற்ற முடியாத வகையில் உடனுக்குடன் பதிவு செய்யப்படுகிறது.

3. ஜகா நாணயம் ஒரு சொத்தாகவும் செயல்படுகிறது.

4. கருப்பு பணம்/ கள்ளப்பணம் போன்ற இடையூறுகள் இந்த பரிமாற்றங்களில் சாத்தியமில்லை.

தற்போது எங்கெல்லாம் ஜகா நாணயம்  பயன்படுகிறது?

1. வெப் பஜார்

இது ஒரு “மல்டி வெண்டார்-மல்டி ப்ராடக்ட்”  வியாபார தளம்.  இதன் மூலம் விற்பனையாளர்கள் மற்றும் பொருள் உற்பத்தியாளர்கள் தத்தம் பொருட்களை நேரடியாகவே அந்தந்த பகுதி மக்களுக்கு தகுந்த விலையில் விற்பனை செய்யலாம். எனவே தங்கள் பகுதியை சார்ந்த பொருட்களை வாடிக்கையாளர்கள் தகுந்த விலைக்கு வீட்டில் இருந்தபடியே வாங்கி உபயோகிக்கலாம். வெப்பசாரின் “டெலிவரி ஏஜென்ட்” கள் உற்பத்தியாளரிடமிருந்து பொருட்களை நேரடியாக பெற்று வாடிக்கையாளர்களிடத்தில் உடனுக்குடன் டெலிவரி செய்கிறார்கள். இந்த ஆன்லைன் வர்த்தக தளத்தில் அன்றாடம் மக்களுக்கு  தேவைப்படும் ‘மீன் மற்றும் இறைச்சி வகைகள்’,  ‘காய்கறி மற்றும் பழங்கள்’,  ‘பல சரக்கு சாமான்கள்’,  ‘மருந்து பொருட்கள்’ மற்றும் ‘உணவு வகைகள்’ முதலியவை விற்பனை செய்யப்படுகின்றன.

2. டான் ஃபிஷ்

டான் ஃபிஷ் என்பது ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் அடங்கிய உயர்தர மீன்களை சுத்தம் செய்து, தகுந்த அளவில் வெட்டி வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு சரியான நேரத்தில் டெலிவரி செய்வதாகும். இது தற்போது நாகர்கோயில் மாநகரத்திலிருந்து செயல்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம்  முழுவதும் இதை பரவலாக்க பிசாக்கா நிறுவனம் தேவையான முன்னெடுப்புகளை செய்து வருகிறது.

இந்தியாவில் செயல்படும் வேறு வணிகங்களின் நாணயங்கள் என்னென்ன?

 டாடா நிறுவனத்தின் Tata Neu, பிளிப்கார்ட்டின்   Super Coins, ரேப்பிடோ பைக் டாக்சியின் Rapido coins  மற்றும் ஃப்ரெஷ் டு ஹோம்-ன் Freshcash   போன்றவை தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஜகா நாணயம் எவ்வாறு செயல்படுகிறது? 

  • வெப்பஜார் செயலியுடன் ஜகா நாணயம் இணைக்கப்பட்டுள்ளது. எனவே வெப்பஜாரில் வர்த்தகம் நடக்கும்போது இந்த நாணயம் பயன்படத் தொடங்குகிறது.
  • டான் ஃபிஷ் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் மீன் வாங்கும் போது ஜகா நாணயம் அவர்களின் வாலட்டிகளில் ‘ஏர் ட்ராப்’ செய்யப்படுகிறது.
  • மேற்படி இரண்டு செயலிகளிலும் நடைபெறும் வியாபாரத்திற்கு அன்பளிப்புகளும், இலவசங்களும் வழங்கப்படுவதால் வர்த்தகம் அதிக அளவில் நடக்க வாய்ப்புள்ளது
  • ஜகாவின் தேவை அதன் புழக்கத்தை விட அதிகமாகும் போது ஜகாவின் மதிப்பு உயர்கிறது.
  • ஜகாவின் தேவை அதிகரிப்பதால் ஜகா வைத்திருப்பவர்களுக்கும் ஜகாவை சொத்தாக வாங்கியவர்களுக்கும் நன்மை பயக்கும்.
டான்ஃபிஷ்-ல் ஜகா நாணயங்களின் படிப்படியான செயல்விளக்கம்
  1. டான் ஃபிஷ் ஆப்பை நிறுவுக.
  2. கூடவே ‘டிரஸ்ட் வாலெட்‘ அல்லது ‘மெட்டா மாஸ்க்‘ வாலெட்-யும் நிறுவுக.
  3. டான் ஃபிஷ் ஆப் மூலமாக தேவைப்படுகிற அன்றாட மீன்களை ஆர்டர் செய்யவும்.
  4. நீங்கள் மீன் வாங்கிய தொகையில் 10%-ஐ ஜகா நாணயங்கள் சலுகைத்தொகையாக உங்கள் வாலட்டில் ஏர் டிராப் பெற்றுக் கொள்ளுங்கள்.
  5. தொடர்ந்து நீங்கள் மீன் வாங்கும் போது சேகரிக்கப்பட்ட மேற்படி நாணயங்களை நீங்கள் டிஸ்கவுண்ட் செய்துமேற்படி கொள்ளலாம்.

6. அல்லது இந்த அன்பளிப்பு நாணயங்களை தொடர்ந்து சேகரித்து ஒரு மெய்நிகர் சொத்தாக பாதுகாக்கலாம். அதன் மதிப்பு நீங்கள் எதிர்பார்த்த அளவு அதிகரித்த பின் ‘பினான்ஸ்’, ‘வஜீரெக்ஸ்’ போன்ற எக்ஸ்சேஞ்ச்களில் விற்கலாம்.

7. இதே போல ‘வெப்பஜார் செயலி’ நடைமுறைக்கு வந்து, விற்பனையாளர்கள்/ வாடிக்கையாளர்கள் தத்தம் பகுதியை சார்ந்த பொருட்களை வர்த்தகம் செய்யும்போது மேற்படி நாணயங்களை முழுமையாக பயன்படுத்தலாம்.

நிறைவுரை

வெப்-3 / பிளாக் செயின் போன்ற தொழில்நுட்பங்களின் வருகை சகா போன்ற பரிவர்த்தனை நாணயங்களை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறது. ஒவ்வொரு தொழில் நிறுவனங்களும் தத்தம் நாணயங்களை வெளியிடும்  ஆரம்ப கட்டத்தில் உள்ளது. பிஸாக்கா என்ற இந்த நிறுவனமும் தங்கள் சொந்த ஸ்டார்ட் அப் வர்த்தகங்களின் பரிவர்த்தனைக்காக சகா என்ற நாணயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடக்க காலமாக இருப்பதால் இந்த நாணயத்தை தற்போது குறைந்த விலைக்கு வாங்க முடியும்.   பிஸாக்காவின் வெப்பஜார், டான் ஃபிஷ் போன்ற தொடக்க வணிகங்கள் வளர்ச்சி அடையும் போது இந்த நாணயத்தின் மதிப்பும் அபரிதமாக உயரும். எனவே இந்த மெய்நிகர் சொத்தை சொந்தமாக்கி கொள்பவர்கள் அதனால் மிகுந்த ஆதாயத்தை பெற முடியும் என்பது திண்ணம்.

Author : Deyennae

Founder- Bizaka, Co-founder- DawnFish, Webbazar & Zaka Coins

For Contact :

Mob: 9489514829 WhatsApp: 9489415067

App @ DawnFish App @ Webbazar

தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: