‘டெலிவரி ஆப்’ என்பது வர்த்தக சூழ்நிலையின் அது தற்போதைய மைல்கல் என்றால், அது மிகையாகாது. எனவே, இந்த ஷாப்பிங் கலாச்சாரத்திற்கு நாம் மாறும் வரை, நம் வாழ்க்கையையும் அன்றாட நடவடிக்கைகளையும் மேற்கொள்வது மேற்கொள்வது நமக்கு கடினமாக இருக்கும். நிச்சயமாக, “டெலிவரி ஆப்” என்பது சில்லறை சந்தையின் உன்னத நிலை ஆகும்.
( இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க ‘இங்கே கிளிக்’ செய்யவும்)
ஏன்? எப்படி?
காலம் மாறுகிறது, நடைமுறைகளும் மாறுகின்றன. முன்னதாக நாம் பொருட்களை நடந்து சென்று வாங்கினோம். பின்னர் நாம் வாகனங்களில் சென்று வாங்கினோம். ஆனால் தற்போது இணையம் மூலம் மொபைல் போன்களை பயன்படுத்தி வீட்டில் இருந்தே கொண்டே நமக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்து வாங்குகிறோம். இதன் சிறப்பம்சம் என்னவெனில், கடைகளை அடைவதற்காக நாம் பயணித்து நமது நேரத்தை செலவழிக்க வேண்டியதில்லை. மாறாக, கடைகள் நம்மை நோக்கி பயணிக்கின்றன.
நமது இருப்பிடத்திலிருந்து அல்லது வேலை ஸ்தலத்திலிருந்து நாம் விரும்புகிற கடைகளில் இருந்து நமக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்தால் நாம் இருக்கும் இடத்திற்கு அந்த பொருள் உடனடியாக வந்து சேர்கிறது. “டெலிவரி ஆப்” என்று சொல்லக்கூடிய செயலிகளும் அதன் தொழில் நுட்பங்களும் இதை நமக்கு சாத்தியப்படுத்தி உள்ளன. உடனடியாக
நமக்கு பிடித்த ஓட்டலில், இருந்து நமக்கு பிடித்த உணவை தருவித்துக் கொள்ளும் வசதியை முதலில் சில நிறுவனங்கள் செயல்படுத்தின. அவை ஸ்விக்கி, சொமேட்டோ, உூபர் ஈட்ஸ் போன்றவை. தற்போது இது மிக விரிவடைந்துள்ளது. நமக்கு தேவையான மளிகை, காய்கறிகள்- பழ வகைகள், மருந்து வகைகள் மற்றும் மீன்- இறைச்சி போன்றவைகளும் நாம் “செயலிகள்” மூலம் இருந்த இடத்திலிருந்து வாங்கலாம்.
இது ஒரு புதிய சந்தை; மிக வேகமாக மற்றும் மிக விரிவாக வளர்ந்து வரும் ஒரு சந்தை ஆகும். இதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் டெலிவரி ஆப் மூலம் மக்கள் பலவிதமான பொருட்களை
கொள்முதல் செய்கின்றனர்.
முக்கியமாக தினசரி தேவைப்படுகிற பொருட்களை மக்கள் அன்றாடம் ஆர்டர் செய்து டெலிவரி ஆப் மூலம் பெற்று பெற்றுக்கொள்கின்றனர். இதில் “ஃபிரெஷ் ஐட்டம்” என்று சொல்லக்கூடிய காய்கறிகள், பழ வகைகள், மீன்,சிக்கன், மட்டன் போன்றவைகள், பலசரக்கு/ மசாலா பொருட்கள மற்றும் மருந்து வகைகள் அடங்கும்.

செயலிகள்
ஏற்கனவே, ஸ்விக்கி, சுமாட்டோ போன்ற டெலிவரி ஆப் நிறுவனங்கள் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களை நிலை வியாபித்துள்ளன. இன்னும் மிக விரைவில் வியாபித்துள்ளன. தொடர்ந்து, அடுத்த நிலை நகரங்களையும், கிராமங்களையும் இந்த தொழில் துறை ஆக்கிரமிக்கப் போகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாகர்கோயில் போன்ற நகரங்களிலும் மக்கள் தங்களுடைய அன்றாட உணவு தேவைகள் மற்றும் தினசரி தேவைகளை அந்தந்த நகரங்களில் உள்ள டெலிவரி ஆப் மூலம் வாங்கிக் கொள்ளும் வழக்கத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றனர்.
காரணிகள்
“டெலிவரி ஆப் தொழில் கலாச்சாரத்தின்” எதிர்காலத்தை பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. அவற்றில் ஒன்று வளர்ந்து வரும் ‘தொழில்நுட்ப உபயோகம்’ ஆகும். தற்போதைய அசுரவேகத் தொழில்நுட்பங்கள் டெலிவரி தொழில் கலாச்சாரத்தை தமது சிறந்த செயல்திறன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில், மற்றும் நேர செலவழிப்பின்றி அளிக்கிறது. அதிவேக இணைய வசதி அதிகரிப்பும், ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரிப்பும் இதன் மற்ற காரணிகள் ஆகும். கூடவே, அதிகரித்து வரும் “பொருளீட்டும் மக்கள்தொகையின் பெருக்கமும்” மற்றும் “உயர்ந்துவரும் வருமான அளவும்” இதற்குப் பின்னூட்டமாக உள்ளன. இரண்டும் இணைந்து, இந்தியாவின் ஆன்லைன் உணவு மற்றும் உணவு பொருள் விநியோக சந்தையின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
டெலிவரி ஆப் எவ்வாறு செயல்படுகிறது?

Swiggy, Zomato போன்ற டெலிவரி ஆப் நிறுவனங்கள் வெறுமனே டெலிவரி செய்வதற்கான பொறுப்பை எடுத்துக் கொள்கின்றன. அவர்களிடம் ‘சுதந்திரடெலிவரி ஏஜென்ட்கள்’ உள்ளதால் இது சாத்தியமாகிறது. வாடிக்கையாளர்கள் இந்த டெலிவரி ஆப் மூலம் தங்கள் உணவு மற்றும் தினசரி தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள். இதே போல பிக் பாஸ்கெட், ஜெப்டோ போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப பலசரக்கு சாமான்கள், காய்கறிகள், பழ வர்க்கங்கள் மற்றும் மருந்து வகைகள் போன்றவற்றை வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் டெலிவரி செய்கின்றனர்.
டெலிவரி ஆப்பினால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்
- பொருட்களை வீட்டில் இருந்து ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
- நமது நேரத்தை செலவழிக்க தேவையில்லை.
- தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றுவதால் மனித உழைப்பு குறைவாக தேவைப்படுகிறது..
- ஒரே நேரத்தில் அதிக வாடிக்கையாளர்கள், அதிகபொருட்களை வாங்க முடிகிறது.
- வரவு-செலவு, கணக்கு-வழக்குகள் துல்லியமாக பராமரிக்க முடிகிறது.
- வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது மிகவும் எளிதாக உள்ளது.
- செலவினங்கள் கணிசமாக குறைவதால் நியாயமான விலைக்கு பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன.
ஸ்விக்கி மற்றும் சுமாட்டோ
ஸ்விக்கி மற்றும் சுமாட்டோ போன்ற “பிளாட்ஃபார்ம்-டு-கன்ஸ்யூமர் டெலிவரி” வகை சந்தை, மொத்த சந்தையின் நான்கில் மூன்று பங்கை தன் வசப்படுத்தி உள்ளன. பெரும்பாலும் இந்தத் துறையில் மேற்படி நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த இரண்டு ஜாம்பவான்களும் இந்தத் துறையில் 65% பங்கை ஆக்கிரமித்துள்ளனர்.
அக்டோபர் 2018 நிலவரப்படி, Zomato டெலிவரி குழு 74,000 ஆகவும், ஸ்விக்கியில் அது 90,000 ஆகவும் உள்ளது. இரண்டு நிறுவனங்களும் தங்கள் வணிகங்களை பெரிய மற்றும் சிறிய நகரங்களுக்கு விரிவுபடுத்தி வருகின்றன.
Swiggy மற்றும் Zomato ஆகியவை உணவு விநியோகத்திற்காக மட்டும் கொண்டுவரப்பட்டவைகள் அல்ல. அவை மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் மருந்துகள் போன்ற பிற விநியோகங்களிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளதை தற்போது நாம் அறிய முடிகிறது. Swiggy instamart அவர்களின் எதிர்காலத் திட்ட முயற்சிகளுக்கான தற்கால எடுத்துக்காட்டு என்று கூறலாம். இத்தகைய வணிக ஜாம்பவான்கள் சில்லறை சந்தைகளில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதற்கு Flipkart சூப்பர் மார்க்கெட் மற்றொரு எடுத்துக்காட்டு.
உணவு, மளிகை, மருந்து, காய்கறிகள், பழங்கள், இறைச்சி மற்றும் மீன் டெலிவரி ஆப் இண்டஸ்ட்ரியின் முக்கிய நிறுவனங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
- ஸ்விக்கி
- சுமாட்டோ
- டன்சோ
- பிக்பாஸ்கெட்
- ஜெப்ட்டோ
- பிளிங்கிட்
- ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்
- ஃப்ரெஷ் டு ஹோம்

“பல விற்பனையாளர்-பல்பொருள்” செயலிகள்
இதில் செயலி நிறுவனர் ஒருவராகவும், விற்பனையாளர்கள் பலராகவும் இருப்பார்கள். இது ஒரு ஆன்லைன் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அல்லது ஆன்லைன் ஷாப்பிங் மால் என்று கற்பனை செய்யலாம். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த கடைகளிலிருந்து தங்களுக்கு பிடித்த பொருட்களை இந்த ஆப் மூலம் தருவித்துக் கொள்ளலாம். DunZo ஆப் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
DunZo மற்றும் பிற செயலிகள் ‘மையப்படுத்தப்பட்ட செயலிகள்’ஆகும். அதேசமயம் Webbazar எனப்படும் ‘பரவலாக்கப்பட்ட செயலி’ தற்போது இந்த துறையில் நுழையவுள்ளது. வெப்பஜாரில், மத்திய அதிகாரம் தானியக்கமாக்கப்பட்டுள்ளது. அதாவது அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது. எனவே, பொருள் உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் போன்ற புற அல்லது சிறு பங்காளிகள் சுதந்திரமாக செயல்பட முடிகிறது.
இங்கு வியாபாரிகள் தங்களின் சொந்த தயாரிப்புகளை விற்க தங்களுடைய பிராந்திய விநியோக முகவர்கள் மூலம் தங்கள் பிராந்திய வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடிகிறது. மூன்றாம் தரப்பு அல்லது இடைத்தரகர்கள் இதில் தடை செய்யப் பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் தங்கள் பிராந்தியங்களில் தயாராகும் நியாயமான விலையில் வாங்க முடிகிறது.
வெப் பஜார் மற்றும் ஜகா நாணயம்
Webbazar என்பது ‘சமூகத்தால் இயக்கப்படும் திட்டம் ’ ஆகும். ஆனால் ஓரு மத்திய அதிகாரத்தால் அல்லது ஒரு தனி நபரால் வழி நடத்தப்படும் மற்ற நிறுவனங்களைப் போன்றதல்ல இது. வணிகத்தை நடத்த பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் Web-III/ blockchain ஆகும். சாலிடிட்டி போன்ற கம்ப்யூட்டர் மொழி இதற்கு கூடுதலாக பின்னணியத்தில் தேவைப்படுகிறது. கூடவே இணையம் மூலமாக செயல்படக்கூடிய ஒரு பண பரிமாற்ற ஊடகம் ஒன்றும் தேவைப்படுகிறது.
எனவே, Zaka Coins எனும் ஒரு டிஜிட்டல் நாணயம் ( Cryptocurrency) இதில் பண பரிவர்த்தனை ஊடகமாக செயல்பட ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. விற்பனையாளர்கள், விநியோக முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையே பரிமாற்ற ஊடகமாக இது செயலாற்றுகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இது எல்லைகள் கடந்தும் செயலாற்றும் திறன் படைத்தது. இணையத்தின் எல்லைகளே இதன் வரம்பிலா எல்லைகளாக உள்ளதே தவிர எந்த தேசங்களும் இதன் எல்லைகள் அல்ல.
சிறிய நகரங்களின் செயல்படும் செயலிகள்
தற்போது ஸ்விக்கி, சுமாட்டோ, டன்ஜோ, பிளின்கிட், ஃப்ரெஷ் டு ஹோம் போன்ற டெலிவரி செயலிகள் பெரிய நகரங்களில் மட்டுமே செயல்படுகின்றன. தற்போது சின்ன நகரங்கள் மற்றும் கிராமங்களில் சில பிராந்திய செயலிகள் பயன்பாட்டிற்கு வர ஆரம்பித்துள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அப்படி செயல்படும் முக்கியமான மூன்று செயலிகள் செயல்படுகின்றன. அவைகளில் ஒன்று “ஸ்னவ்ச்”, மற்றொன்று “எம்ஷாப்”, மூன்றாவது “போத்தீஸ்மார்ட்” ஆகும். இவை தவிர, வெர்பஜாரின் “டான்ஃபிஷ்“என்ற உயர் தர கடல் மீன் விற்பனை செய்யும் செயலியும் நாகர்கோயில் சந்தையில் தற்போது நுழைந்துள்ளது.
Postscript @ DawnFish
At DawnFish, we sell a wide variety of fish and other seafood. You can order boneless cubes, slices, curry cuts and whole fish from us as per your requirements. Besides, usual sea fish, we also have prawns, crabs, squid and other oysters available. We sell daily caught fish of the highest quality
Author : Deyennae
Founder : Bizaka
Co-founder : Webbazar, Zaka Coins, DawnFish